Autism Arinthukolvom

ஆட்டிசம் அறிந்துகொள்வோம்

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை உலகெங்கும் அதிகரித்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனஉறுதியான தரவுகள் இல்லையெனினும், தமிழகத்திலும் ஆட்டிச பாதிப்பு உடையவர்களின் எண்ணிக்கை சில லட்சங்கள் இருக்கும் என்று நம்பப் படுகிறதுஆட்டிசம் பாதித்த குழந்தைகளை/நபர்களைப் சிறப்பாகப் பேண, அக்கோளாறு பற்றிய புரிதலும் மற்றும் அதற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றிய புரிதலும் மிகவும் அவசியம்ஆட்டிசம் சார்ந்து பிரசுரிக்கப்பட்ட பெரும்பாலான புத்தகங்களும் ஆய்வுகளும் ஆங்கிலத்திலேயே உள்ளதால், தமிழகத்தில் வாழும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஆட்டிசக் குறைபாட்டை எளிதில் புரிந்து கொள்ள இயலவில்லைஅவர்களுக்கு உதவும் பொது நல நோக்குடன், விஜயா செயல் முறை மருத்துவ (ஆக்குபேஷனல் தெரபி) மையம் மூலமாக, "ஆட்டிசம் அறிந்துகொள்வோம்" பகுதி பிரசுரிக்கப்படுகிறதுஇப்பகுதியில் தரப்படும் தகவல்கள் ஆதாரம் (புத்தகங்கள், ஆய்வுகள், இணையதள குறிப்புகள்) சார்ந்தவைஆதாரக் குறிப்புகளை (References) அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்.

எழுதுபவர்: முனைவர் கார்த்திக் மணி

முனைவர் கார்த்திக் மணி அவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக செயல் முறை மருத்துவராகவும், ஆராய்ச்சியாளராகவும், மற்றும் எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார்தற்பொழுது அமெரிக்காவில் செயல் முறை மருத்துவ தேசிய சான்றிதழ் வாரியத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும் தொலைமறுவாழ்வு மூலம் செயல் முறை மருத்துவ ஆலோசனையும் வழங்குகிறார். அவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்.

மின்னஞ்சல் முகவரி: kmani@votc.co.in

பிகு: இப்பகுதியில் தரப்படும் தகவல்கள் ஆட்டிசக் குறைப்பாடு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடனேயே அளிக்கப்படுகின்றதுசுய பரிசோதனைக்காகவோ அல்லது சுய சிகிச்சைக்காகவோ அல்லதங்களுக்கோ தாங்கள் சார்ந்தவருக்கோ ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால், தகுந்த மருத்துவரை அல்லது சிகிச்சை நிபுணரை அணுகவும்.

No comments:

Post a Comment

Creative Commons License
Articles published on www.vijayaotcentre.blogspot.com by Karthik Mani is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.